Sunday 6 October 2013

நவராத்ரி சங்கீத பதிவு 2 (பாரதியார், பாம்பே ஜெயஸ்ரீ)

இன்று நவராத்ரி இரண்டாவது நாள். (6 அக்டோபர் 2013) பாம்பே ஜெயஸ்ரீயின் இன்னொரு பாரதியார் பாடல் கேட்போம்.

முதல் பதிவிற்கு அப்படியொரு வரவேற்பு இல்லை. பதிவுலக நண்பர்கள் சனி, ஞாயிறு விடுமுறையானதால், வீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்கலாம். அவர்களும் கொலு வைப்பதில் மனைவிமார்களுக்கு உதவி பண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.




முதலில் பாட்டின் வரிகள். இதுவும் ச்ருங்கார ரசத்தில் அமைந்த பாட்டுதான். வெறும் பாட்டாகப் படித்தால், ஒரு ஓட்டு ஓட்டிவிட்டு, வேறு ஏதாவது படிக்கப்போய்விடுவீர்கள். கொஞ்சம் பொறுங்கள்.

எனக்குப்பிடித்த வரி

பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!

நல்ல கற்பனை. என் பதிவுலக, முக நூல் சகோதரிகளுக்கும் இந்த வரிகள் பிடிக்குமென்று நினைக்கிறேன்.

வழக்கம்போல, இந்த பாட்டிலும், ஜெயஸ்ரீ ஜ்வலிக்கிறார். இன்னொரு விஷயம். ஒவ்வொரு வரியிலும் கவனியுங்கள். வரிகள் முடியும் போலிருக்கும் அதற்குப் பிறகு ஒரேயொரு வார்த்தை வந்து ஒட்டிக்கொள்ளும். உதாரணமாக,’ கனிகள் கொண்டு தரும்... ’ சிறிது இடைவெளி விட்டு, கண்ணன் என்ற சொல் வரும். முழுப்பாடலும் இப்படித்தான். இந்த பாணி எனக்குப்பிடித்திருந்தது. உங்களுக்கு.

சரி, முதலில் பாட்டுக்கேட்போம்.


கண்ணன் பாட்டு

15. கண்ணன்-என் காந்தன்

வராளி-திஸ்ர ஏக தாளம்

சிருங்கார ரசம்

கனிகள் கொண்டுதரும்-கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும்-பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான்-கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே-வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே-மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே-கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே-செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்
பேசருந் தெய்வமடி!

குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்
குழைத்து மார்பெழுத;
சங்கையி லாதபணம்-தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல்-முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ!-பின்னோர்
வருத்த மில்லையடீ!




அன்புடன் வெங்கட்
6 அக்டோபர் 2013

No comments: