Tuesday 24 September 2013

அர்ச்சனாவின் புற்று நோய் சிகிச்சைக்கு உதவுங்கள்

 நண்பர்களே,

அர்ச்சனா நேற்று உட்லண்ட்ஸ் மருத்துவமனையிலிருந்து கீமோதெரபி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியிருக்கிறார். கீமோதெரபியின் பின்விளைவுகளாக வாந்தியும், தலைவலியும் இருப்பதாகவும் அதற்கும் மருந்து எடுத்துக்கொள்வதாகவும் அவரது அப்பா எழுதியுள்ளார். மருத்துவமனை ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளார். இதோ உங்கள் பார்வைக்கு.




அர்ச்சனாவிற்கு உதவி கேட்டு, 15ம் தேதி முதல் தடவையாக பதிவிட்டேன். 20ம் தேதிக்குள் 85,000 ரூபாய் தேவையாக இருந்தது. முக நூலிலும் உதவி கேட்டிருந்தேன். சில நண்பர்கள், தமிழ் படிக்கத்தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் பதிவிட முடியுமா என்று கேட்டனர். அந்த வலைத்தளம் இங்கே உள்ளது. 


இரக்க மனமுள்ள நல்லன்பர்களால் இதுவரை எண்பத்தியொன்பதாயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது. பல நன்கொடையாளர்கள், தங்கள் பெயர் தெரிய வேண்டாமென்று கேட்டுக்கொண்டதால், யாருடைய பெயரையும் இங்கே எழுதவில்லை. வங்கியில் பணம் வந்ததற்கான அத்தாட்சி (Pass book copy) உள்ளது.

இரண்டாவது முறை சிகிச்சைக்கு 74000 வரை மருந்துகள், மருத்துவக் கட்டணம் மட்டுமே ஆகியுள்ளது. 13 அக்டோபர் மூன்றாவது தடவையாக கீமோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் ஆறு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனால் இதைப்படிக்கும் அன்பர்கள் தயை கூர்ந்து நிதியுதவி அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் வெங்கட்



Monday 23 September 2013

அர்ச்சனாவின் கேன்சர் சிகிச்சை; தற்போதய செய்தி

 நண்பர்களே,

முதலில், என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நிதியுதவி அளித்தமைக்கு கோடானுகோடி நன்றி.

இப்போதுதான், அர்ச்சனாவின் அப்பாவிடம் பேசினேன். இரண்டாவது கீமோதெரபி சிகிச்சை இன்று முடிவடைந்தது. இரவு சங்காரெட்டிக்கு திரும்பிச்செல்கிறார்கள்.

அடுத்த முறை சிகிச்சைக்கு 13ம் தேதி அக்டோபர் திரும்பவும் அட்மிட் ஆக வேண்டும். ஒருதடவைக்கு ரூபாய் 80,000 செலவாகிறது. இந்த முறைக்கான செலவை நன்கொடை மூலம் சமாளித்து விட்டார்கள். மொத்த செலவும் நாம் அனுப்பின தொகையிலிருந்து செலவழித்தாக கூறினார்.

மருத்துவமனையின் ஆவணங்களை ஒன்றிரண்டு நாளில் ஸ்கான் செய்து அனுப்புவதாகச் சொல்லியுள்ளார். வந்ததும் இந்த வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.

பாரதி சொன்னதுபோல், “ நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்”. ஒரு ஏழைப்பெண்ணின், இளம் தாயின் உயிர் காத்த புண்ணியம் உங்களுக்குச் சேரும்.

அன்புடன் வெங்கட்

Tuesday 17 September 2013

அர்ச்சனாவின் மருத்துவ உதவி தற்சமய நிலவரம்

 நண்பர்களே,

இரு தினங்களுக்கு முன், அர்ச்சனா என்கிற இளம் தாய்க்கு, மார்பக புற்று நோய்க்காக, நிதியுதவி கேட்டிருந்தேன். அது பற்றி சில பின்னோட்டங்கள் வந்தன. நேற்றும் ஒரு பதிவிட்டு, மேலும் சில தகவல்கள் கொடுத்திருந்தேன். அந்த பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.

அர்ச்சனாவின் அப்பா இப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 20ம் தேதி செப்டம்பர், கீமோதெரபிக்காக அட்மிட் ஆக வேண்டும். ஒரு தடவைக்கான மருத்துவச்செலவு 85,000 ரூபாய்.

 நானும், என் நண்பர்களுமாக கணிசமான தொகை அனுப்பினோம். இன்னும் ஒன்றிரண்டு அன்பர்கள் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கிட்டத்தட்ட 50,000 வரை சேர்ந்துள்ளது. மருத்துவ செலவு தவிரவும் மற்ற செலவுகள் இருக்கும். 20 ம் தேதிக்கு அதிக நாளில்லை. தவிர, மொத்தம் ஆறு தடவை கீமோதெரபி போக வேண்டும். ஒரு தடவை சிகிச்சை முடிந்திருக்கிறது. 20ம் தேதி, இரண்டாவது முறை. இன்னும் நான்கு முறை போயாக வேண்டும். எனவே, உங்கள் உதவி அவசியம் தேவை.

இருபத்தாறு வயதான இளம்தாய். ஒரு மாதக்குழந்தை. பாலூட்ட வேண்டிய வேளையில், மார்பகப் புற்று நோயால் அவதிப்படுகிறார்.

தயவுசெய்து உதவுங்கள்.

அன்புடன் வெங்கட்

Monday 16 September 2013

அர்ச்சனாவிற்கு மருத்துவ உதவி; மேலதிக தகவல்கள்


 நேற்று அர்ச்சனா என்ற இளம்தாய்க்கு மார்பக புற்று நோய்க்கான் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டிருந்தேன். அதற்கு இரு நண்பர்கள் பின்னோட்டமிட்டிருந்தனர். நன்றி.

ஒரு நண்பர், தொலைபேசி எண் கேட்டிருந்தார். கீழே கொடுத்திருக்கிறேன்.

வங்கி கணக்கு அர்ச்சனாவின் அம்மாவின் பெயரில் உள்ளது. அர்ச்சனா தற்சமயம் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறார். அர்ச்சனாவின் அப்பா பெயர் ராமாசார்யா. தொலைபேசி 99633 05980.

நான் மின்னஞ்சல் வந்ததும், அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவமனை அருகில்தான் என்னுடன் பணிபுரிபவரின் வீடு உள்ளது. அர்ச்சனாவின் டாக்டர் பெயர், அந்த மருத்துவமனை இணைய தளத்தில் இருக்கிறது. இந்த வேண்டுகோள் உண்மையானது. 20ம் தேதி அர்ச்சனா திரும்பவும் அட்மிட் ஆக வேண்டும். ஒரு முறைக்கான கட்டணம் 85,000 ரூபாய். மொத்தம் ஆறு முறை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒரு முறை போய் வந்திருக்கிறார்.

நண்பர்களே, தயவு செய்து உதவுங்கள். அவரது, மின்னஞ்சல் படித்ததும் மனசு பதைபதைத்தது. எனக்கு முன்பின் அறியாதவர்கள். ஒரு ஏழைப்பெண், இளம் தாய், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தருணத்தில் மார்பக புற்று நோய். எண்ணிப்பாருங்கள்.

Account name :S.B.Revathi 
Bank:Andhra Bank 
Branch: Sangareddy Branch Medak District Andhra Pradesh
A/c No. 102910100027475
IFSC code ANDB0001029
Branch code 1029
MICR code 500011133

அன்புடன் வெங்கட்

ஒரு அனானி, புற்று நோய்க்கு, மருத்துவ சிகிச்சையே தேவையில்லை. வீட்டிலிருந்தே ஒரு புத்தகத்தைப் படித்து குணப்படுத்தி விடலாம் என்று எழுதியிருந்தார். அய்யா, நான் இணைத்திருக்கும் லாப் ரிப்போர்ட்களைப் பாருங்கள். எவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தெரியும். இது புத்தகம் படித்து, ஆராய்ச்சி செய்ய வேண்டிய சமயமில்லை. அவசர நிலை. புரிந்து கொள்ளுங்கள்.

Sunday 15 September 2013

ஒரு ஏழைப் பெண்ணின் புற்றுநோய் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்!

 நண்பர்களே,

மின்னஞ்சலில் தினமும் ஏதாவது உதவி கேட்டு அஞ்சல் வருவது வழக்கமான ஒன்று. அதுபோல, ஒரு நாள், அர்ச்சனா என்ற இளம் பெண்ணிடமிருந்து வந்தது. சப்ஜெக்ட் கூட எழுதப்படாத அந்த மின்னஞ்சல், இன்பாக்ஸில் வந்ததே ஆச்சர்யம்தான்.

அர்ச்சனா, 26 வயதே ஆன இளம் தாய். குழந்தை ஸாத்விக் பிறந்து ஒரு மாதமாகிறது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, செகந்தராபாத் அருகே உள்ள ‘உட்லண்ட் ஹாஸ்பிடலில்’ கீமோதெரபி சிகிச்சை ஒரு தடவை எடுத்துக்கொண்டுள்ளார். மொத்தம் ஆறு தடவை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒருதடவை எடுத்துக்கொள்ள கட்டணம் ரூபாய் 85,000/

அர்ச்சனாவின் கணவர் வரதராஜ கோவிந்தாச்சார்யலு, அலேரி கிராமத்தில் கோவில் பூசாரியாக இருக்கிறார். அப்பா ராமாசார்யாவுக்கும் அதே உத்யோகம்தான். ஏழ்மையான குடும்பமென்பது கண்கூடு.

இதுபோல நிறைய கோரிக்கைகள் வருவதால், தொலைபேசி எண் வாங்கி பேசினேன். தவிர, லாப் ரிப்போர்ட், மருத்துவமனை டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்கள். இதோ உங்கள் பார்வைக்கு.

லாப் ரிப்போர்ட்



மருத்துவமனை ரிப்போர்ட்
திரும்ப 20 செப்டம்பர் 2013 அட்மிட் பண்ண வேண்டுமென்று எழுதியிருப்பதை பார்க்கவும்




அடுத்த கீமோதெரபி சிகிச்சைக்காக 20 செப்டம்பர் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். பணமின்மையால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இதைப் படிக்கும் நல்லன்பர்கள், தயைகூர்ந்து தங்களால் இயன்ற அன்பளிப்பை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

16 செப்டம்பர் 2013 அன்று எழுதியவை

வங்கி கணக்கு அர்ச்சனாவின் அம்மாவின் பெயரில் உள்ளது. அர்ச்சனா தற்சமயம் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறார். அர்ச்சனாவின் அப்பா பெயர் ராமாசார்யா. தொலைபேசி 99633 05980.

நான் மின்னஞ்சல் வந்ததும், அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவமனை அருகில்தான் என்னுடன் பணிபுரிபவரின் வீடு உள்ளது. அர்ச்சனாவின் டாக்டர் பெயர், அந்த மருத்துவமனை இணைய தளத்தில் இருக்கிறது. இந்த வேண்டுகோள் உண்மையானது. 20ம் தேதி அர்ச்சனா திரும்பவும் அட்மிட் ஆக வேண்டும். ஒரு முறைக்கான கட்டணம் 85,000 ரூபாய். மொத்தம் ஆறு முறை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒரு முறை போய் வந்திருக்கிறார்.

நண்பர்களே, தயவு செய்து உதவுங்கள். அவரது, மின்னஞ்சல் படித்ததும் மனசு பதைபதைத்தது. எனக்கு முன்பின் அறியாதவர்கள். ஒரு ஏழைப்பெண், இளம் தாய், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தருணத்தில் மார்பக புற்று நோய். எண்ணிப்பாருங்கள்.

Account name :S.B.Revathi 
Bank:Andhra Bank 
Branch: Sangareddy Branch Medak District Andhra Pradesh
A/c No. 102910100027475
IFSC code ANDB0001029
Branch code 1029
MICR code 500011133

அன்புடன் வெங்கட்