Tuesday 30 July 2013

எழில் கொஞ்சும் மலை நாடு (கேரளா)


டிஸம்பர் மாதம், கேரளாவிற்கு சுற்றுலா பயணமாக குடும்பத்துடன் சென்றிருந்தோம். ஊரெல்லாம் சுற்றிக் களைத்து வந்து திரும்பவும் தினசரி அலுவல் வாழ்க்கை தொடங்கியதும், கேமராவில் இருந்த புகைப்படங்களை ஒழுங்கு படுத்தக்கூட நேரமில்லை. என் நண்பர் ஒருவர் சொன்னார்; “சுற்றுலா முடிந்து வந்ததும், போட்டோ, வீடியோ இவற்றை திரும்ப்பார்த்து, பத்திரமாக சேமித்து வைக்க தனியே இன்னொரு சின்ன விடுமுறை வேண்டுமென்றார். உண்மைதான்.

நாங்கள் போனது கீழ்க்கண்ட இடங்கள்

1. அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி
2. மூணார்
3. தேக்கடி
4. ஆலப்புழா படகு வீடு
5. குருவாயூர்/கொச்சி

இவற்றில் ஆலப்புழா படகு வீடு அனுபவம் மறக்க முடியாதது. ஆம்ஸ்டர்டாம் நகரின் கால்வாய்களில் (கேனல்) முன்பு பயணித்திருக்கிறேன். வெனிஸ் நகரின், படகு சவாரிகள் பற்றி படித்திருக்கிறேன்/ பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த அனுபவத்திற்கு எதுவும் ஈடாகாது. இருபுறமும் பச்சைப் பசேலென்று வயல்கள், தென்னை மரங்கள், வாழை மரங்கள்! கண்ணுக்கெட்டிய வரை தண்ணீர். சிலுசிலுக்கும் காற்று. ஆஹா! என்ன அனுபவம்.

இயற்கை அன்னையின் கொள்ளை அழகை நான் வர்ணிப்பதை விட, கீழே உள்ள வீடியோக்களை நீங்களே பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

படகு வீடு சவாரி; இன்னொரு படகு வீடு முன்னால் பயணிக்கிறது



போகிற வழியில் ஒரு அழகிய கிராமம். பூத்துக்குலுங்கும் பசுமை!


சுற்றுச் சூழலை பாதிக்காத கைவிசை படகில் தினசரி வாழ்க்கை


பயணிகள் ஏறி, இறங்கும் நிறுத்தம் (பஸ் ஸ்டாப் மாதிரி)


ஆற்றின் கரையில் ‘குரு’ பகவானின் கோயில் (அம்பலம்)


ஆற்றங்கரை வாழ்க்கை



என்ன நண்பர்களே, ரசித்தீர்களா? உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பதியுங்கள். இன்னும் நிறைய புகைப்படங்களோடு மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன்

வெங்கட் (தமிழ்  நேசன்)