Monday 16 September 2013

அர்ச்சனாவிற்கு மருத்துவ உதவி; மேலதிக தகவல்கள்


 நேற்று அர்ச்சனா என்ற இளம்தாய்க்கு மார்பக புற்று நோய்க்கான் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டிருந்தேன். அதற்கு இரு நண்பர்கள் பின்னோட்டமிட்டிருந்தனர். நன்றி.

ஒரு நண்பர், தொலைபேசி எண் கேட்டிருந்தார். கீழே கொடுத்திருக்கிறேன்.

வங்கி கணக்கு அர்ச்சனாவின் அம்மாவின் பெயரில் உள்ளது. அர்ச்சனா தற்சமயம் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறார். அர்ச்சனாவின் அப்பா பெயர் ராமாசார்யா. தொலைபேசி 99633 05980.

நான் மின்னஞ்சல் வந்ததும், அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவமனை அருகில்தான் என்னுடன் பணிபுரிபவரின் வீடு உள்ளது. அர்ச்சனாவின் டாக்டர் பெயர், அந்த மருத்துவமனை இணைய தளத்தில் இருக்கிறது. இந்த வேண்டுகோள் உண்மையானது. 20ம் தேதி அர்ச்சனா திரும்பவும் அட்மிட் ஆக வேண்டும். ஒரு முறைக்கான கட்டணம் 85,000 ரூபாய். மொத்தம் ஆறு முறை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒரு முறை போய் வந்திருக்கிறார்.

நண்பர்களே, தயவு செய்து உதவுங்கள். அவரது, மின்னஞ்சல் படித்ததும் மனசு பதைபதைத்தது. எனக்கு முன்பின் அறியாதவர்கள். ஒரு ஏழைப்பெண், இளம் தாய், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தருணத்தில் மார்பக புற்று நோய். எண்ணிப்பாருங்கள்.

Account name :S.B.Revathi 
Bank:Andhra Bank 
Branch: Sangareddy Branch Medak District Andhra Pradesh
A/c No. 102910100027475
IFSC code ANDB0001029
Branch code 1029
MICR code 500011133

அன்புடன் வெங்கட்

ஒரு அனானி, புற்று நோய்க்கு, மருத்துவ சிகிச்சையே தேவையில்லை. வீட்டிலிருந்தே ஒரு புத்தகத்தைப் படித்து குணப்படுத்தி விடலாம் என்று எழுதியிருந்தார். அய்யா, நான் இணைத்திருக்கும் லாப் ரிப்போர்ட்களைப் பாருங்கள். எவ்வளவு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தெரியும். இது புத்தகம் படித்து, ஆராய்ச்சி செய்ய வேண்டிய சமயமில்லை. அவசர நிலை. புரிந்து கொள்ளுங்கள்.

2 comments:

Ragavendran K said...

நன்றி வெங்கட்....

என்னால் முடிந்த பண உதவியை கட்டாயம் செய்வேன்.....

நண்பர்களை உதவ முன் வாருங்கள்....(முற்றிலும் உண்மை...)

Venkat said...

நன்றி ராகவேந்திரன்,

உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள். இப்போது நானும் சில நண்பர்களுமாக கொஞ்சம் பணம் அனுப்பினோம். தேவையோ மிகப் பெரிது. 20ம் தேதிக்குள் 85 வேண்டும். இன்னும் 40 வரை வேண்டும்.

அன்புடன் வெங்கட்