Sunday 15 September 2013

ஒரு ஏழைப் பெண்ணின் புற்றுநோய் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்!

 நண்பர்களே,

மின்னஞ்சலில் தினமும் ஏதாவது உதவி கேட்டு அஞ்சல் வருவது வழக்கமான ஒன்று. அதுபோல, ஒரு நாள், அர்ச்சனா என்ற இளம் பெண்ணிடமிருந்து வந்தது. சப்ஜெக்ட் கூட எழுதப்படாத அந்த மின்னஞ்சல், இன்பாக்ஸில் வந்ததே ஆச்சர்யம்தான்.

அர்ச்சனா, 26 வயதே ஆன இளம் தாய். குழந்தை ஸாத்விக் பிறந்து ஒரு மாதமாகிறது. மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, செகந்தராபாத் அருகே உள்ள ‘உட்லண்ட் ஹாஸ்பிடலில்’ கீமோதெரபி சிகிச்சை ஒரு தடவை எடுத்துக்கொண்டுள்ளார். மொத்தம் ஆறு தடவை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒருதடவை எடுத்துக்கொள்ள கட்டணம் ரூபாய் 85,000/

அர்ச்சனாவின் கணவர் வரதராஜ கோவிந்தாச்சார்யலு, அலேரி கிராமத்தில் கோவில் பூசாரியாக இருக்கிறார். அப்பா ராமாசார்யாவுக்கும் அதே உத்யோகம்தான். ஏழ்மையான குடும்பமென்பது கண்கூடு.

இதுபோல நிறைய கோரிக்கைகள் வருவதால், தொலைபேசி எண் வாங்கி பேசினேன். தவிர, லாப் ரிப்போர்ட், மருத்துவமனை டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார்கள். இதோ உங்கள் பார்வைக்கு.

லாப் ரிப்போர்ட்

மருத்துவமனை ரிப்போர்ட்
திரும்ப 20 செப்டம்பர் 2013 அட்மிட் பண்ண வேண்டுமென்று எழுதியிருப்பதை பார்க்கவும்

அடுத்த கீமோதெரபி சிகிச்சைக்காக 20 செப்டம்பர் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டும். பணமின்மையால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இதைப் படிக்கும் நல்லன்பர்கள், தயைகூர்ந்து தங்களால் இயன்ற அன்பளிப்பை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

16 செப்டம்பர் 2013 அன்று எழுதியவை

வங்கி கணக்கு அர்ச்சனாவின் அம்மாவின் பெயரில் உள்ளது. அர்ச்சனா தற்சமயம் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறார். அர்ச்சனாவின் அப்பா பெயர் ராமாசார்யா. தொலைபேசி 99633 05980.

நான் மின்னஞ்சல் வந்ததும், அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவமனை அருகில்தான் என்னுடன் பணிபுரிபவரின் வீடு உள்ளது. அர்ச்சனாவின் டாக்டர் பெயர், அந்த மருத்துவமனை இணைய தளத்தில் இருக்கிறது. இந்த வேண்டுகோள் உண்மையானது. 20ம் தேதி அர்ச்சனா திரும்பவும் அட்மிட் ஆக வேண்டும். ஒரு முறைக்கான கட்டணம் 85,000 ரூபாய். மொத்தம் ஆறு முறை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒரு முறை போய் வந்திருக்கிறார்.

நண்பர்களே, தயவு செய்து உதவுங்கள். அவரது, மின்னஞ்சல் படித்ததும் மனசு பதைபதைத்தது. எனக்கு முன்பின் அறியாதவர்கள். ஒரு ஏழைப்பெண், இளம் தாய், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தருணத்தில் மார்பக புற்று நோய். எண்ணிப்பாருங்கள்.

Account name :S.B.Revathi 
Bank:Andhra Bank 
Branch: Sangareddy Branch Medak District Andhra Pradesh
A/c No. 102910100027475
IFSC code ANDB0001029
Branch code 1029
MICR code 500011133

அன்புடன் வெங்கட்

3 comments:

Anonymous said...

I would like to bring your notification that this cancer can be cured permanently with zero or minimal expense at home, patient can treat themselves by staying at home by reading the book " Health in your Hands vol -I & II written by Mr Devendra vora MD. The cure is permanent and painless process.

Ragavendran K said...

Hi,

If you Dont mine Kindly Share the contacts for that people.

In this content simply account details only mentioned.
(Account name and patient name also different)

Dont mistake me....(So many of them misusing)

Regards,
Ragav

Venkat said...