Tuesday, 24 September 2013

அர்ச்சனாவின் புற்று நோய் சிகிச்சைக்கு உதவுங்கள்

 நண்பர்களே,

அர்ச்சனா நேற்று உட்லண்ட்ஸ் மருத்துவமனையிலிருந்து கீமோதெரபி சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியிருக்கிறார். கீமோதெரபியின் பின்விளைவுகளாக வாந்தியும், தலைவலியும் இருப்பதாகவும் அதற்கும் மருந்து எடுத்துக்கொள்வதாகவும் அவரது அப்பா எழுதியுள்ளார். மருத்துவமனை ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளார். இதோ உங்கள் பார்வைக்கு.




அர்ச்சனாவிற்கு உதவி கேட்டு, 15ம் தேதி முதல் தடவையாக பதிவிட்டேன். 20ம் தேதிக்குள் 85,000 ரூபாய் தேவையாக இருந்தது. முக நூலிலும் உதவி கேட்டிருந்தேன். சில நண்பர்கள், தமிழ் படிக்கத்தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் பதிவிட முடியுமா என்று கேட்டனர். அந்த வலைத்தளம் இங்கே உள்ளது. 


இரக்க மனமுள்ள நல்லன்பர்களால் இதுவரை எண்பத்தியொன்பதாயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது. பல நன்கொடையாளர்கள், தங்கள் பெயர் தெரிய வேண்டாமென்று கேட்டுக்கொண்டதால், யாருடைய பெயரையும் இங்கே எழுதவில்லை. வங்கியில் பணம் வந்ததற்கான அத்தாட்சி (Pass book copy) உள்ளது.

இரண்டாவது முறை சிகிச்சைக்கு 74000 வரை மருந்துகள், மருத்துவக் கட்டணம் மட்டுமே ஆகியுள்ளது. 13 அக்டோபர் மூன்றாவது தடவையாக கீமோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டும். மொத்தம் ஆறு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனால் இதைப்படிக்கும் அன்பர்கள் தயை கூர்ந்து நிதியுதவி அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் வெங்கட்



No comments: